நிறுவனம்:யாழ்/ தையிட்டி கணேசா வித்தியாலயம்

From நூலகம்
Name யாழ்/ தையிட்டி கணேசா வித்தியாலயம்
Category பாடசாலைகள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place தையிட்டி
Address தையிட்டி, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

தையிட்டி கணேச வித்தியலயமானது யாழ்ப்பாண மாவட்டத்தில் காங்கேசன்துறைச் சந்தியிலிருந்து கிழக்கே ஏறக்குறைய ஒரு மைல் தூரத்திலுள்ள தையிட்டி எனும் கிராமத்தில் சாம்பூர் என்னும் பெயருடைய காணியில் 1900ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1901ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. 1902ஆம் ஆண்டு ஆவணி மாதம் 03ஆம் திகதி இப் பாடசாலைக்கான நிரந்தர கட்டடம் ஒன்று வழங்கப்பட்டது. சுமார் 100 மாணவர்களோடு ஆரம்பமான இப் பாடசாலையின் ஆரம்பகால ஆசிரியர்களில் மகாவித்துவான் சி.கணேசையரும் ஒருவராவார். 1962.11.22ஆம் திகதி அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டு இப் பாடசாலை அக்கால அதிபர்களின் மூலமும் மேலும் பலரின் உதவியுடனும் புனரமைக்கப்பட்டுள்ளது.

Resources

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 77-78