நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு பாணாவிடை சிவன் கோயில்
Name | யாழ்/ புங்குடுதீவு பாணாவிடை சிவன் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | யாழ்ப்பாணம் |
Place | புங்குடுதீவு |
Address | 7ஆம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம் |
Telephone | |
Website |
புங்குடுதீவு பாணாவிடை சிவன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவு எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக சிவபெருமான் எழுந்தருளியுள்ளார்.
யாழ்ப்பாண நகரிலுள்ள வண்ணார் பண்ணை தட்டாதெருவில் வசித்து வந்த தவத்திரு மருதப்பு என்பவர் 1910ஆம் ஆண்டில் இராமேஸ்வரம் எனும் திருப்பதிக்கு அடிமை பூண்டு அடைக்கலம் புகுந்தவேளை ஒருநாள் இரவு இராமேஸ்வரப் பெருமான் இவருடைய கனவில் தோன்றி மேற்குறிப்பிட்ட ஆலயத்தின் மூலலிங்கத்தை காட்டி புங்குடுதீவிலுள்ள என்னை தரிசித்து அருள் பெருவாய் என அசரீரியாக கூறி மறைந்ததாகவும், அதன் பிரகாரம் இவ் ஆலயம் உருவாக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
மாவிலங்க இனத்தைச் சேர்ந்த மர நிழலில் லிங்கமாக எழுந்தருளியுள்ளார் மூலவர். மூலவரை இராமலிங்கேஸ்வரர் என்றும் அம்பாளை ஸ்ரீ பர்வதவர்த்தனி என்றும் போற்றி வழிபாடு செய்கின்றனர். 1948 ல் அவ் மர நிழலிலேயே ஆலயம் அமைக்கப்பட்டது.
1948ல் நடந்த குடமுழுக்கு விழாவைத் தொடர்ந்து ஆலயத்தின் 2ஆவது கும்பாபிசேகம் 1980இல் நிகழ்த்தப்பட்டுள்ளதோடு பின்னர் பெருந்தொகையான செலவிலே திருப்பணிகள் நடைப்பெற்று இவ் ஆலயத்தின் திருக்குடமுழுக்கு விழாவும் இராஜகோபுர அத்திவாரமிடலும் அருளமுதம் நூல் வெளியீடும் 24.03.2002ல் நடைபெற்றது. ஆலயப் பெருவிழா சித்திரைச் சதயத்தை தீர்த்தமாக வைத்துப் 10 நாள் திருவிழா நடைபெறும், தினமும் மூன்று காலப் பூசையும் நடைபெறுகின்றது.
Resources
- நூலக எண்: 5274 பக்கங்கள் 165-167