நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு ஶ்ரீ பராசக்தி வித்தியாலயம்

From நூலகம்
Name யாழ்/ புங்குடுதீவு சேர்.வை.துரைசாமி வித்தியாலயம்
Category பாடசாலை
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place புங்குடுதீவு
Address புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

புங்குடுதீவு சேர்.வை.துரைசாமி வித்தியாலயம் 1910இல் புங்குடுதீவு, குறிகாட்டுவான், நடுவுத்துருத்தி ஆகிய பகுதி மாணவர்களின் கல்விக்காக பெரியார் வ.பசுபதிப்பிள்ளை அவர்களால் குறிகாட்டுவான் மா.நாகலிங்கம் அவர்களின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது. இப் பாடசாலையை ஆரம்பிப்பதற்கு அரசிடமிருந்து அனுமதியை மு.லோட்டன் அவர்களே பெற்றுக்கொடுத்தார். இவரே இப் பாடசாலையின் முதல் முகாமையாளராகவும் இருந்துள்ளார். முதல் அதிபராக வ.சுப்பிரமணியம் அவர்கள் கடமையாற்றியுள்ளார்.

1956வரை குறிகாட்டுவானில் இயங்கிய இப் பாடசாலை 01.௦1.1957இல் முனைப்புலத்திற்கு இடமாற்றப்பட்டது. அரசு சுவீகரிப்புக் கட்டளைச் சட்டப்படி 03.04.1963இல் இப் பாடசாலை அரசுடமையாக்கப்பட்டு 1968இல் சங்கத்தார் கேணிக்கு இடமாற்றப்பட்டு இயங்கிவந்தது. 17.10.1991இல் தீவகத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்த இப் பாடசாலை யாழ் நகரில் சிறிது காலம் இயங்கியது. அப்போது கடமையாற்றிய அதிபர் 1992ஆம் ஆண்டு மலையகத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றதுடன் செயலிழந்த இப்பாடசாலை மீள ஆரம்பிக்கப்படவில்லை.

Resources

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 168