நிறுவனம்:யாழ்/ பெரியவிளான் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை
From நூலகம்
| Name | யாழ்/ பெரியவிளான் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை |
| Category | பாடசாலைகள் |
| Country | இலங்கை |
| District | யாழ்ப்பாணம் |
| Place | சண்டிலிப்பாய் |
| Address | பெரியவிளான், சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம் |
| Telephone | |
| Website |
பெரியவிளான் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் படசலையானது யாழ்ப்பாண மாவட்டத்தில் சண்டிலிப்பாய் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் கிராமத்தில் அமைந்துள்ளது. 1928ஆம் ஆண்டு பெரியவிளான் கிராமத்தில் அ.யோண்பிள்ளை, அ.சவரிமுத்து ஆகிய பெரியோர்களின் ஊக்கத்தால் கத்தோலிக்க பாதிரியார் பூலான் சுவாமி அவர்கள் இப் பாடசாலையை ஆலய வளவில் ஆரம்பித்தார். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட சாமிநாதன் அவர்களே இப் பாடசாலையின் முதலாவது தலமை ஆசிரியராக பொறுப்பேற்றார்.
ஆரம்ப பாடசாலையாக ஆரம்பித்த இப் பாடசாலை 1953 முதல் 1971 வரை கனிஷ்ட பாடசாலையாக உயர் வகுப்புக்களை கொண்டு இயங்கியது. 01.12.1962இல் இப் பாடசாலை அரசினால் சுவீகரிக்கப்பட்டு அரசாங்க பாடசலையக மாறியது. 1975ஆம் ஆண்டு தொடக்கம் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியும் இங்கு நடைபெற்றுவருகின்றது.
Resources
- நூலக எண்: 13940 பக்கங்கள் 104-105