நிறுவனம்:யாழ்/ மயிலிட்டி ஞானோதய வித்தியலயம்

From நூலகம்
Name யாழ்/ மயிலிட்டி ஞானோதய வித்தியாலயம்
Category பாடசாலைகள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place மயிலிட்டி
Address மயிலிட்டி, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

மயிலிட்டி ஞானோதய வித்தியாலயமானது யாழ்ப்பான மாவட்டத்தின் மயிலிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ளது. 1922ஆம் ஆண்டு தொடக்கப்பெற்ற இக் கிராமத்து பாலர் ஞானோதய சங்கம் வர்த்தகர் க.கந்தையா அவர்களின் துணையோடு இவ் வித்தியாலயத்தை நிறுவியது.

1925ஆம் ஆண்டு இது உதவி நன்கொடைப் பெறும் பாடசாலையாக பதிவு செய்யப்பட்டது. எனினும் சங்கத்தின் நிதி நெருக்கடி காரணமாக இப் பாடசாலை 1927.07.11 ஆம் திகதி சைவ வித்தியாவிருத்திச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டது. ஏறத்தாள முப்பத்தாறு ஆண்டுகள் சைவ வித்தியாவிருத்திச் சங்கத்தின் முகாமைக்குள் இருந்த இவ் வித்தியாலயம் 1963.09.05இல் அரசினாற் சுவீகரிக்கப்பட்டது.

ஆரம்பத்தில் கட்டுவன் சந்தியில் அமைந்திருந்த இப் பாடசாலை 1964.01.18ஆம் திகதி மயிலிட்டி தெற்கில் அமைந்திருந்த விளைபொருள் உற்ப்பத்தி விற்பனைச் சங்கத்துக்கு உரித்தான கட்டிடத்துக்கு இடம் பெயர்ந்தது. 1975ஆம் ஆண்டின் பின்னர் இப் பாடசாலை பலரது ஒத்துழைப்புடன் மீளமைக்கப்பட்டு 1977 முதல் க.பொ.த. [சா/த] வரையான வகுப்புக்கள் நடாத்தப்பட்டன. 1980ஆம் ஆண்டு இப் பாடசாலையின் பொன் விழாவும் கொண்டாடப்பட்டது.

Resources

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 102-103