நிறுவனம்:யாழ்/ மல்லாகம் கனிஷ்ட வித்தியாலயம்

From நூலகம்
Name யாழ்/ மல்லாகம் கனிஷ்ட வித்தியாலயம்
Category பாடசாலைகள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place மல்லாகம்
Address மல்லாகம், யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

மல்லாகம் கனிஷ்ட வித்தியாலயமானது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் மல்லாகத்தில் அமைந்துள்ளது. இவ் வித்தியாலயம் 1832இல் அமெரிக்கன் மிஷன் பாடசாலை என்ற பெயரில் சிறிய கொட்டிலிலேயே ஆரம்பிக்கப்பட்டது. நா.தில்லையம்பலம் என்பவர் அமெரிக்கன் மிஷனரிகளுடன் இணைந்து எடுத்துக் கொண்ட நன்முயற்சியின் பயனாகவே இப் பாடசாலை அமைக்கப்படலாயிற்று. இவரே இவ் வித்தியாலயத்தின் ஆரம்பக்கால அதிபராகவும் கடமையாற்றினார்.

01.01.1972இல் 412 மாணவர்களுடனும் 14 ஆசிரியர்களுடனும் இப் பாடசாலை மல்லாகம் மகா வித்தியாலயத்துடன் இணைக்கப்பட்டது பின்னர் இதன் தனித்துவ நிர்வாகத்தின் அவசியத்தை உணர்ந்த கல்வித் திணைக்களம் 1979ஆம் ஆண்டு மல்லாகம் கனிஷ்ட வித்தியாலயம் என்ற பெயரில் ஆரம்ப பாடசாலையாக செயற்பட அங்கீகாரம் அளித்தது.

Resources

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 21-24