நிறுவனம்:யாழ்/ வேலணை ஆத்திச்சூடி வித்தியாசாலை

From நூலகம்
Name யாழ்/ வேலணை ஆத்திசூடி வித்தியாசாலை
Category பாடசாலை
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place வேலணை
Address வேலணை, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

வேலணை ஆத்திசூடி வித்தியசாலையானது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலணையில் அமைந்துள்ளது. 1951ஆம் ஆண்டு இ.கைலாசபிள்ளை அவர்கள் ஊரார் பலருடன் சேர்ந்து வேலணை வடக்கில் பாடசாலை ஒன்றை அமைக்கும் பணிகளை மேற்கொண்டார். இதன் பயனாக சைவ வித்தியாவிருத்திச்சங்க முகாமையாளர் இராசரத்தினம் அவர்களால் சதாசிவம்பிள்ளை அவர்களின் தலைமையில் வேலணை வடக்கு ஆத்திசூடு வித்தியாசாலை எனும் நாமத்துடன் 1952ஆம் ஆண்டு தைப்பூசத் திருநாளில் இப் பாடசாலை ஆரம்பித்துவைக்கப்பட்டது.

ஆரம்பத்தில் பாலர்பிரிவு தொடக்கம் 04ஆம் தரம் வரை நடாத்தப்பட்டன. ஆரம்ப அதிபராக கோப்பாயை சேர்ந்த வல்லிபுரம் அவர்கள் பணியாற்றினார். சிறப்பாக இயங்கி வந்த இப் பாடசாலை 1990இல் இடம்பெற்ற பாரிய மக்கள் இடப்பெயர்வு காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டு பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்படுகையில் சரஸ்வதி வித்தியாலயத்தில் ஒரு பிரிவாகவே இயங்கி வருகின்றது.

Resources

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 202-206