நிறுவனம்:யாழ்/ வேலணை செட்டிபுலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
From நூலகம்
Name | யாழ்/ வேலணை செட்டிபுலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை |
Category | பாடசாலை |
Country | இலங்கை |
District | யாழ்ப்பாணம் |
Place | வேலணை |
Address | செட்டிபுலம், வேலணை, யாழ்ப்பாணம் |
Telephone | |
Website |
வேலணை செட்டிபுலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையானது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலணை செட்டிபுலம் எனும் இடத்தில் அமைந்துள்ளது.
செட்டிபுலம் கிராமத்துப் பிள்ளைகளின் கல்விக்காக வேண்டி 1945ஆம் ஆண்டு திரு.வைரமுத்து ஆறுமுகம் அவர்களின் முயற்சியினாலும், அன்றைய அரச சபை சபாநாயகர் சேர்.வைத்தியலிங்கம் துரைசாமியின் ஆதரவிலும் இப் பாடசாலையை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆரம்பத்தில் 1 தொடக்கம் 5 வரையே வகுப்புக்கள் நடைப்பெற்றன. இராணுவ நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்த இப் படசாலை மக்கள் மீள குடியேறிய தொடங்கிய பின்னர் சின்னையா ச.சேவியர் அவர்களினால் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு 02.01.2001இல் வைபவரீதியாக தீவக வலய கல்விப்பணிப்பாளர் திரு.ப.விக்னேஸ்வரன் என்பவரால் திறந்து வைக்கப்பட்டது.
Resources
- நூலக எண்: 4640 பக்கங்கள் 195-197