நிறுவனம்:யாழ்/ வேலணை ஶ்ரீ மகேஸ்வரி அம்மன் ஆலயம்
From நூலகம்
Name | யாழ்/ வேலணை ஶ்ரீ மகேஸ்வரி அம்மன் ஆலயம் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | யாழ்ப்பாணம் |
Place | வேலணை |
Address | வேலணை, யாழ்ப்பாணம் |
Telephone | |
Website |
ஈச்சம்பத்தை அம்மன் என வழங்கும் ஶ்ரீ மகேஸ்வரி அம்மன் ஆலயம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலணைத்தீவில் அம்மன் நகரிலுள்ள உலவித்தோட்டம் எனும் இடத்தில் அமைந்துள்ளது.
ஆரம்பத்தில் சிதம்பரம் வேலாசி என்பரின் அருள்வாக்கிற்கமைய அவரது நிலத்திலேயே வேப்பமரத்தின் கீழ் அம்பாளின் திருவுருவப்படம் ஒன்றினை வைத்து பூசித்து வந்தனர். பின்னர் 1943ஆம் ஆண்டு வைத்தி அம்பலவியும், ஊர் மக்களும் இணைந்து நிதி திரட்டி அயல் கிராமத்தில் உள்ளவர்களிடம் 25 பரப்பு நிலத்தை உலவி தோட்டம் எனும் இடத்தில் வாங்கி ஒரு ஓலைக் குடிசையை அமைத்து அதில் அம்மனை ஸ்தாபனம் செய்து வழிபட்டு வந்தனர். 1965ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்டு சங்காபிஷேகம் செய்தர்ஹோடு அலங்கார உற்சவமும் நிகத்தத்தொடங்கினர். இன்று இவ் ஆலயம் பேராலயமாக உருவெடுத்துள்ளது.
Resources
- நூலக எண்: 4640 பக்கங்கள் 126-130