நிறுவனம்:யாழ்/ மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோயில்

From நூலகம்
Name யாழ்/ மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place மட்டுவில்
Address மட்டுவில், தென்மராட்சி, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

பன்றித்தலைச்சி அம்மன் கோவில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள வரலாற்றுப் புகழ் பெற்ற ஆலயங்களுள் ஒன்று. இது தென்மராட்சி பெருநிலப் பரப்பில் சாவகச்சேரி-புத்தூர் வீதியில் மட்டுவில் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் வயலும் வயல் சார்ந்த இடத்தில் மருதமரமும், புளியமரமும் ஓங்கி வளர்ந்த பகுதியில் அமைந்துள்ளது.

முற்காலத்தில் அம்பாள் மட்டுவில் பகுதியில் இயற்கை வனப்பு நிறைந்த கிராமத்தில் உறைந்து பல அற்புதங்களையும் அருளாட்சியையும் வழங்கி வந்ததாக வரலாறுகள் கூறிவருகின்றன.

இவ் ஆலயம் கி. பி. 1750 ஆம் ஆண்டில் திருநாகர் கதிர்காமர் என்பவரால் வைரக் கற்களை (வெள்ளைக் கற்கள்) கொண்டு கட்டப்பட்டது. 1946 ஆம் ஆண்டில் முதன் முதலாக கும்பாபிஷகம் செய்யப்பட்டதுடன் அதே ஆண்டு மார்கழித் திருவெம்பாவையில் கொடியேற்றத் திருவிழாவும் முதன் முதலாக இடம்பெற்றன. 1952 இல் இருந்து ஆறுகால நித்திய பூசை நடைமுறைக்கு வந்தது.

தினமும் இக் கோயிலில் ஆறுகாலப் பூசைகள் இடம்பெறுகின்றன. பன்றித்தலைச்சி என்ற சொற்றொடரோடு பங்குனித் திங்களும் சேர்ந்து வரும். யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள சைவ மக்கள் பங்குனித் திங்களில் அம்பாள் கேணித் தீர்த்தத்தில் தலை முழுகி பொங்கலிட்டு கோவில் வாசலில் தாங்களே நீவேதித்து வணங்குவார்கள். பொங்கற் தலமாகவும், தீர்த்த சிறப்பும், முர்த்திப் பெருமையும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது.

வெளி இணைப்பு