நிறுவனம்:விடிவெள்ளி முதியோர் சங்கம்

From நூலகம்
Name விடிவெள்ளி முதியோர் சங்கம்
Category அமைப்பு
Country இலங்கை
District மட்டக்களப்பு
Place களுவன்கேணி
Address களுவன்கேணி,செங்கலடி,மட்டக்களப்பு
Telephone 0771792140
Email -
Website -

விடிவெள்ளி முதியோர் சங்கமானது கிழக்கு மாகாணத்தில் கரையோர வேடர்கள் செறிந்து வாழும் களுவன்கேணி கிராமத்தில் கடந்த கி.பி.1975 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரைக்குமாக இயங்கிக் கொண்டு வருகிறது. ஆரம்பத்தில் இருந்து பல நபர்கள் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்களாகக் காணப்பட்டாலும் கடந்த பதினைந்து ஆண்டுகளாக மூத்தான் மாணிக்கவேல் என்பவர் தலைவராகவும், வைரமுத்து மாணிக்கவேல் என்பவர் செயலாளராகவும், வைரமுத்து அரியமலர் என்பவர் பொருளாளராகவும் காணப்படுகின்றனர். இவர்களுடன் ஒன்பது பேர் கொண்ட குழு அங்கத்தவர்களும் உள்ளனர். இவ்வமைப்பில் அறுபது வயதிற்கு மேற்பட்ட அனைவரும் அங்கத்தவர்களாக இணைந்து கொள்ள முடியும். இந்த அமைப்பினால் நுண்கடன் உதவிகள், கிணறு மற்றும் மலசலகூடம் முதலான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மரணச்சடங்கிற்கான உதவிகள் என்பன செயற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.