நிறுவனம்ːகிளி/எழில்மிகு திருக்குழல் நன்மாதுமை சமேத கணபதீஸ்வரர் பெருமாள் ஆலயம்

From நூலகம்
Name கிளி/எழில்மிகு திருக்குழல் நன்மாதுமை சமேத கணபதீஸ்வரர் பெருமாள் ஆலயம்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District அம்பாறை
Place மாயவனூர், வட்டக்கச்சி
Address மாயவனூர், கிளிநொச்சி
Telephone
Email
Website

மாயவனூர் பிரதேசம் கிளிநொச்சி மாவட்டத்தின் கீழ் பால் விளங்கும் வட்டக்கச்சி பகுதியில் சிவன் ஆலயம் இல்லை என்ற குறையை போக்க இவ்வாலயம் அமையப் பெற்றது.

வட்டக்கச்சி பெரிய வில்லு குளத்திற்கு அருகாமையில் ஸ்ரீரங்கநாதர் கோயில் கொண்டிருந்தமையால் தாம் குடியேறிய ஊருக்கு மாயனூர் என பெயர் சூட்டி வாழ்ந்துவந்தனர். 1983 ஆம் ஆண்டு ஏற்பட்ட இனக் கலவரத்தின் போது இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கு மாயவனூரில் காணிகள் வழங்கப்பட்டது. தற்போது உள்ள சிவன் ஆலயத்திற்கு முன்னால் ஆலமரத்தடியில் ஒரு கல்லை வைத்து பிள்ளையார் உருவ வழிபாடு செய்து வந்தனர். இதை அவதானித்த நாவலர் வீதியில் வசித்து வந்த புலவர் மாஸ்டர் என்று அழைக்கப்படும் சிதம்பரப்பிள்ளை இராசரத்தினம் அவர்கள் தனது சிந்தனையில் உதித்த எண்ணத்தினாலும் வட்டக்கச்சி பிரதேசத்தில் ஒரு சிவன் ஆலயம் இல்லாத காரணத்தினாலும் அவ்விடத்தில் சிவாலயம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தார். ஆத்மஜோதி முத்தையா அவர்களை ஆலயத்துக்கு வர வைத்து மக்களுக்கு ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்தி சிவாலயம் அமைக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார். இம் முயற்சியின் பயனாக புலவர் மாஸ்டர் தனது சொந்த செலவில் சிவலிங்கம் ஒன்றை வாங்கி பிரம்மஸ்ரீ கெங்காதர குருக்கள் அவர்களினால் 1985 ஆம் ஆண்டு தைப்பூச தினத்தன்று சுப முகூர்த்த வேளையில் பிள்ளையார் சிலையும், முருகனுக்கு வேலும் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டு மண்டலாபிஷேகம் மேற்கொள்ளப்பட்டது. அன்று முதல் சிவன் ஆலயத்திற்கு நடைபெற வேண்டிய பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. பிள்ளையார் வழிபாடு செய்து வந்தமையால் அமைக்கப்பட்ட சிவாலயத்துக்கு திரு.சி. இராசரத்தினம் அவர்கள் கணபதீச்சரம் என்று பெயர் சூட்டினர். தொடர்ந்து நிர்வாகசபை ஸ்தாபிக்கப்பட்டு போசகராக சி இராசரத்தினம் தலைவராக திரு ம.இராசரத்தினம் செயலாளராக திரு பரந்தாமன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர். பரிபாலன சபையினர் ஆலய நிர்வாகத்தை பொறுப்பேற்று கோயிலைப் புதுப்பித்து சுவாமி அம்பாள் கருவறை மண்டபம் அமைத்து நீர் வசதியற்ற மேட்டு நிலத்தில் மிக ஆழமான கிணறு வெட்டினர். அத்துடன் திருக்குறள் நன்மாதுமை அம்பாள் பிரதிஷ்டை செய்து குடமுழுக்கு செய்யப்பட்டது.