நிறுவனம்:தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்

From நூலகம்
Name தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்
Category இயக்கம்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place நீர்வேலி
Address
Telephone
Email
Website

தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் 1966-1967 ஆம் ஆண்டுகள் காலப்பகுதியில் சாதியத்தை, சாதிய ஒடுக்குமுறையை, தீண்டாமையை எதிர்க்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட பரந்துபட்ட அமைப்புக்களின் கூட்டமைப்பாகும். குறிப்பாக பொதுவுடமைவாதிகளும், பொதுவுடமைக் கொள்கை சராத ஜனநாயக முற்போக்காளர்களும் ஒருங்கே இணைந்து செயற்படக்கூடிய தளமாக இந்த இயக்கம் உருவாக்கப்பட்டது. இதன் முதல் மாநாடு 1967-10-21 அன்று யாழில் நடைபெற்றது. எஸ். ரி. என். நாகரட்ணம் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

கோயில் மற்றும் தேநீர்கடை பிரவேசம், நீண்டாமை எதிர்ப்புப் போராட்டங்கள், ஓவியக் கண்காட்சி, கலை இலக்கியச் செயற்பாடுகள்(கவிதை, சிறுகதை, புதினம், நாடகம்,) அரசியல் செயற்பாடுகள் என்பவற்றை முன்னெடுத்ததோடு. பொது இடங்களில் தீண்டாமையை ஒழிப்பதில் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் முக்கிய பங்காற்றியது.