நிறுவனம்:புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிச கட்சி

From நூலகம்
Name புதிய-ஜனநாயக மார்க்சிச-லெனினிச கட்சி
Category அரசியல் கட்சி
Country இலங்கை
District
Place
Address ஹெம்டன் ஒழுங்கை,வெள்ளவத்தை,கொழும்பு 06.
Telephone 0112473757,0779774427,0716745642
Email newdemocraticmlparty@gmail.com
Website ndpsl.org

புதிய சனநாயக மார்க்சிச-லெனினிசக் கட்சி (New-Democratic Marxist-Leninist Party> NDMLP) 1978 ஆம் ஆண்டு இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி (இடது) என்ற பெயரில் நிறுவப்பட்டது. மாக்சியம், லெனினியம், மற்றும் மாவோயிசம் கொள்ளைகளை கொண்டுள்ளது. நிறுவக பொதுச் செயலாளர் கே. ஏ. சுப்பிரமணியம். 1991 ஆம் ஆண்டு பெயரை புதிய சனநாயகக் கட்சி என மாற்றம்பெற்றது. மீண்டும் 2010 யூன் மாதம் 5வது அனைத்து இலங்கை மாநாட்டில் புதிய ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி என பெயர் முற்றம்பெற்றது. இலங்கையின் தேர்தல் ஆணையகத்தில் 2020 அக்டோபர் 14 அன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டது. இதன் தேர்தல் சின்னம் "வெந்நீர்க்கெண்டி" (கேத்தல்).

2010 மத்திய குழுவில் சி. கா. செந்திவேல் - பொதுச் செயலாளர் வெ. மகேந்திரன் - தேசிய அமைப்பாளர், இ. தம்பையா - சர்வதேச அமைப்பாளர், சோ. தேவராஜா - பொருளாளர் உலக அளவில் பல்வேறு நாடுகளிலும் இயங்கும் மார்க்சிச - லெனினிசக் கட்சிகளுடனும் இடதுசாரிக் கட்சிகளுடனும் உறவினைப் பேணும் இக்கட்சி, புரட்சிகரக் கட்சிகள் அமைப்புக்களின் அனைத்துலக ஒருங்கமைப்பு (ICOR) இல் அங்கம் வகிக்கிறது

இலங்கையில் நான்கு முக்கிய முரண்பாடுகள் உண்டு என்றும், நான்கு முனைகளிலும் சமகாலத்தில் போராட வேண்டும், இதில் இன முரண்பாடு முதன்மை முரண்பாடாகவும் வர்க்க முரண்பாடு அடிப்படை முரண்பாடாகவும் கொள்ளப்படுகிறது.

  • இன முரண்பாடு
  • வர்க்க முரண்பாடு
  • சாதிய முரண்பாடு
  • பெண்கள் மீதான அடக்குமுறை (பால்நிலை முரண்பாடு)


இலங்கையில், சிங்களவர், இலங்கைத் தமிழர், முஸ்லிம்கள், மலையகத் தமிழர் எனும் நான்கு தேசிய இனங்களும் பல்வேறு இனக்குழுக்களும் பழங்குடிகளும் வாழ்வதாக வரையறுத்து, இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ஒன்றுபட்ட இலங்கைக்குள் நான்கு தேசிய இனங்களுக்குமான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான தீர்வினை முன்மொழிகிறது. 1960களில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு எதிர்ப்புப் போராட்டம், மலையகத்தில் மேல் கொத்மலை நீர்த்தேக்க எதிர்ப்புப் போராட்டம் போன்றவற்றில் இந்தக் கட்சியின் பங்கு கணிசமானது. இடதுசாரிய அடிப்படையில் வர்க்க அரசியலே முன்னெடுக்கப்படுகிறது.