நிறுவனம்:யாழ்/ அரியாலை ஞானவைரவர் கோவில்

From நூலகம்
Name யாழ்/ அரியாலை ஞானவைரவர் கோவில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place அரியாலை
Address கோட்டையடித்தெரு, அரியாலை, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

பலதசாப்தங்களிற்கு முன்னர் எமது மூதாதைகளால் அரியாலை கொட்டையடி என்னும் பகுதியில் ஒரு நாவல் மரத்தின் கீழ் வைரவர் சூலம் ஒன்றை வைத்து வழிபாடு செய்து வந்தனர். இவ்வாறு சூலத்தைத் ஸ்தாபித்த்வர் யார் என்பது எம்முன்னாள் பரம்பரையினருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. கொட்டையடி என்றால் எமது மூதாதையார்கள் பாரம்பரிய விளையாட்டுக்களான இலுப்பைக் கொட்டையடித்தல், போர்த்தேங்காய் அடித்தால் போன்றவற்றில் விற்பன்னர்களாக இருந்துள்ளனர். இதனால் இப்பகுதிக்கு அரியாலையின் ஏனைய இடங்களிலிருந்து இவ்விளையாட்டுக்களை விளையாட இளைஞர்கள் வந்திருந்தார்கள் அவர்கள் தாம் செல்லும் இடத்தை அடையாளப்படுத்த பேச்சு வழக்கமாக சொல்லிய இடப்பெயராக கொட்டையடி என்று இப்பகுதி அழைக்கப்பட்டது. வைரவப் பெருமானின் அருளாட்சியினால் இப்பகுதி மக்கள் யாவரும் சீரும் சிறப்புமாக வாழ்ந்து வந்தனர். பெருமானின் மீது கொண்ட பக்தியால் பெருமானிற்கு பொங்கல், சிறப்புத் தினங்களில் விசேட தீபங்கள் ஏற்றல் போன்ற மரபு முறை வழிபாடுகளைச் செய்து வந்தனர் பெருமானின் அருட்கடாட்சத்தை பெற்று சிறப்பாக வாழ்ந்து வந்த இம்மக்கள் பெருமானிற்கு ஆகமமுறைப்படியான ஓர் ஆலயத்தை அமைத்து வழிபட விரும்பினர் பெருமான் சூல வடிவில் கோயில் கொண்டிருந்த வளவின் உரிமையாளரிடம் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினர் அடியாளர்களின் விருப்பத்தை புரிந்து கொண்ட காணியின் உரிமையாளரான திரு. ஆறுமுகம் சுப்பிரமணியம் அவர்கள் தனது காணியில் ஆலயத்தை அமைக்க தனது விருப்பத்தை தெரியப்படுத்தி தானே முன்னின்று ஆலயத்தைக் கட்டுவித்தனர். மக்கள் கனவான் சுப்பிரமணியத்தின் உதவியுடன் வைரவப்பெருமான் கோயில் கொண்டிருந்த நாவல்மரத்தின் கீழ் சிறிய கோயில் ஒன்றை 1917ம் ஆண்டு ஆறுமுகம் சுப்பிரமணியம் அவர்கள் தனது காணியில் அமைத்தார். சூலவடிவில் இருந்த வைரவப்பெருமானை ஞான வைரவப் பெருமானாக மூலா லயத்தில் பிரதிஷ்டை செய்தனர். இவ்வாறு சிறிது சிறிதாக அபிவிருத்தி அடைந்து 1934ம் ஆண்டு முதன் முதலாக கும்பாபிஷேகம் நடைபெற்று ஆலயம் ஆகமவிதிப்படியான ஆலயமாக மாற்றியமைக்கப்பட்டது பின்னர் சில அபிவிருத்தி வேலைகளும் திருத்தங்களும் செய்யப்பட்டு 1954ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. 1940ம் ஆண்டு முதல் பரிபாலன சபை யாப்புரீதியாக உருவாக்கப்பட்டு இப்பரிபாலன சபையின் முயற்சியினால் உள்வீதி புனரமைத்தல், உள்வீதி உருவாக்கம் முன்மண்டப உருவாக்கம், மணிக்கூட்டுக் கோபுரம் புனரமைத்தல், பிள்ளையார் முருகன் பரிவாரமூர்த்திகளுக்கு சிறு கோவில் அமைத்தல் போன்ற அபிவிருத்திப் பணிகளால் ஆலயம் பெரிய ஆலயமாக மாற்றம் அடைந்தது சிறப்பான உற்சவமூர்த்தி பிரதிட்ஷனம் செய்யப்பட்டதை அடுத்து 1972ஆம் ஆண்டு தொடக்கம் 10நாட்கள் நூலங்காரத் திருவிழா இடம்பெற்று வருகிறது. வேண்டிய வாகனங்கள் சிறப்பான திருமஞ்சம் சப்பைரதம் போன்றன அடியார்களால் அன்பளிப்பு செய்து அலங்காரத் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகின்றது.