நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு திருநாவுக்கரசு வித்தியாலயம்

From நூலகம்
Name யாழ்/ புங்குடுதீவு திருநாவுக்கரசு வித்தியாலயம்
Category பாடசாலை
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place புங்குடுதீவு
Address ஊரைதீவு, புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

திருநாவுக்கரசு வித்தியாலயம் யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவு, ஊரதீவு என்னும் கிராமத்தில் பாணாவிடை என்ற இடத்தில் அமைந்துள்ளது. 1935ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் நவராத்திரி ஆரம்ப தினத்தில் தற்காலிகமாக ஊரதீவு திருநாவுக்கரசு நாயனார் மடத்தில் திருநாவுக்கரசு வித்தியாசாலை என்னும் பெயரில் இப் பாடசாலை சைவ வித்தியாபிவிருத்திச் சங்கத்தால் நிறுவப்பட்டது.

1935ஆம் ஆண்டு சி.நல்லதம்பி ஆசிரியர் தனது செலவில் பத்துப் பரப்புக் காணியை வை.சின்னையா என்பவரிடம் வாங்கி சைவ வித்தியா விருத்திச் சங்கத்திற்கு கையளித்தார். இங்கு ஒரு கட்டிடம் கட்டப்பட்டு 1936ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புதிய கட்டிடத்திற்கு இப் பாடசாலை மாற்றப்பட்டது. 30.10.1995இல் இராணுவ நடவடிக்கை காரணமாக தென்மராட்சி நோக்கிய இடப்பெயர்வுடன் செயலிழந்த இப் பாடசலை மீள ஆரம்பிக்கப்படவில்லை.

Resources

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 164