"நிறுவனம்:யாழ்/ வேலணை பெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
வரிசை 1: வரிசை 1:
 
{{நிறுவனம்|
 
{{நிறுவனம்|
பெயர்=யாழ்/ வேலணை பெரியபுலம் மகா கணபதிபிள்ளையார் ஆலயம்|
+
பெயர்=யாழ்/ வேலணை பெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்|
 
வகை=இந்து ஆலயங்கள்|
 
வகை=இந்து ஆலயங்கள்|
 
நாடு=இலங்கை|
 
நாடு=இலங்கை|

11:23, 24 மார்ச் 2024 இல் நிலவும் திருத்தம்

பெயர் யாழ்/ வேலணை பெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் வேலணை
முகவரி 8ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம் www.velanaipillaiyar.blogspot.com

யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மேற்குத் திசையில் அமைந்துள்ள தீவுக் கூட்டங்களுள் லைடன் தீவு முதன்மையானது. இங்கு உலகப் புகழ்பெற்ற இயற்கைத் துறைமுகங்களில் ஒன்றான ஊர்காவற்றுறை உண்டு. இத் தீவுகளுக்கெல்லாம் ஆட்சிபுரியும் மணியகாரன் பதவி வகித்தோர் நிலை கொண்டிருந்த இடம் வேலணையாகும். இதனால் வேலணை தீவுகளுக்கு ஒரு தலைநகர் போல விளங்குகிறது. வேலணை கிழக்கு, மேற்கு என இரு பிரிவுகளை உடையது.

வேலணை மேற்கில் கோயில் கொண்டு எழுந்தருளி அடியவர்களுக்கு எளியவராகி அருள் புரிந்து கொணிடிருக்கிறார் பெரியபுலம் மகாகணபதிப்பிள்ளையார். கோயில் தாபிக்கப்பட்டிருக்கும் தலத்தின் பெயர் பெரியபுலம் என்பதாகும். இதனால் இவர் பெரியபுலம் மகாகணபதிப்பிள்ளையார் என அழைக்கப்படுகிறார்.

போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலங்களில் பல சைவக் கோயில்கள் இடித்து அழிக்கப்பட்டன என்பது வரலாறு. அப்பொழுது இக்கோயில் அவர்களது கைவரிசைக்கு அகப்படாமல் முடியோடு நித்திய, நைமித்திய பூசைகள் நடைபெற்று வந்தமையால் “முடிப்பிள்ளையார்” என்ற சிறப்புப் பெயரும் இக்கோயிலுக்கு உண்டு. இந்த ஆலயத்தில் தாபிக்கப்பட்ட மூர்த்திக்கு மகாகணபதி என்று கும்பாபிஷேக காலத்தில் நாமகரணம் செய்யப்பட்டதனால் "மகாகணபதிப் பிள்ளையார்" என்றும் வழங்கப்படுகிறது.

சந்திரசேகரக் குருக்களும், சுப்பிரமணியம் என்பவரும் முல்லைத்தீவிலுள்ள கோவில் ஒன்றில் கும்பாபிஷேக வேலைகளை செய்து முடித்து திரும்பும் வழியில் நிழலுக்கு இளைப்பாறிய மரம் ஒன்றின் கீழ் சருகுகளைக் கூட்ட பிள்ளையார் சிலை ஒன்று காணப்பட்டதாகவும் இதை எடுத்துச்சென்று பெரியபுலத்தில் தாபிப்போம் என்று சொல்லியபடியே கொண்டு வந்து சுப்பிரமணியர் தனக்கு சொந்தமான காணியில் ஒரு ஓலைக் குடிசையை அமைத்து பிள்ளையாரை வைத்து தாபித்ததாக ஆலய வரலாறு கூறுகின்றது.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 72-82