நெஞ்சாங்கூட்டு நினைவுகள்

From நூலகம்
நெஞ்சாங்கூட்டு நினைவுகள்
968.JPG
Noolaham No. 968
Author இரத்தினவேலோன், ஆ.
Category தமிழ்ச் சிறுகதைகள்
Language தமிழ்
Publisher மீரா பதிப்பகம்
Edition 2006
Pages vi + 102

To Read

நூல்விபரம்

65ஆவது மீரா பதிப்பக வெளியீடு. தனது சொந்த வாழ்வின் அனுபவங்களாக முதல் ஐந்து கதைகளும், புற அனுபவச் சித்திரிப்புகளாக பின்னைய நான்கு கதைகளும் அமைகின்றன. சமூகம் அதன் சிக்கல்கள், சிக்கெடுக்கும் பிரயத்தனங்கள் இப்படி வாழ்வின் பல கோணங்கள் நூலாசிரியரின் கதைக்கருக்களாகின்றன. பூச்சுகளற்ற கிராமிய வாழ்வும் மொழியும் கதைகளை நகர்த்திச் செல்கின்றன. நெஞ்சாங்கூட்டு நினைவுகள், சரவணை, பிறந்தநாள், புத்துணர்ச்சி, தந்தையுமாகி, அறிமுக விழா, ஒற்றைப்பனை, புதிய தரிசனங்கள், அம்மா ஆகிய தேர்ந்த ஒன்பது கதைகளை இத்தொகுப்பில் சேர்த்திருக்கிறார். வடமாகாணத் தமிழ் இலக்கிய விழாவின் 2006ம் ஆண்டுக்கான இலக்கியப்பரிசை வென்ற நூல்.


பதிப்பு விபரம் நெஞ்சாங்கூட்டு நினைவுகள். புலோலியூர் ஆ.இரத்தினவேலோன். கொழும்பு 06: மீரா பதிப்பகம், 191/23, ஹைலெவல் வீதி, கிருலப்பனை, 1வது பதிப்பு, டிசம்பர் 2006. (கொழும்பு 13: ஈ-குவாலிட்டி கிராப்பிக்ஸ், 315, ஜம்பட்டா வீதி). 6 + 102 பக்கம், விலை: ரூபா 180., அளவு: 21 * 15 சமீ.

-நூல் தேட்டம் (# 4617)