ஆளுமை:இராஜ்தேவன், சகாதேவன்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:38, 30 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராஜ்தேவன்
தந்தை சகாதேவன்
தாய் இராஜ இராஜேஸ்வரி
பிறப்பு 1979,.04.03
ஊர் நைஜீரியா
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராஜ்தேவன், சகாதேவன் (1979.04.03 - ) நைஜீரியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை சகாதேவன்; தாய் இராஜ இராஜேஸ்வரி. இவர் பேர்கன் பல்கலைக்கழகம், ஒஸ்லோ பல்கலைக்கழகம், ஒலுசன்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கணனித்துறை, கணிதத்துறை ஆகிய துறைகளில் கல்வி கற்றார். இராஜ்கண்ணா என்ற பெயரில் புலம்பெயர் இரண்டாம் தலைமுறையினர் மத்தியிலும், இலக்கிய வாசகர்கள் மத்தியிலும் நன்கு அறிமுகமான ஈழத்தவரான இவர், புள்ளிவிபரவியலாளராகவும், நோர்வேயில் தேன் தமிழ் ஓசை வானொலியில் பகுதிநேர நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும், அறிவிப்பாளராகவும் பணியாற்றுகின்றார்.

1996 ஆம் ஆண்டிலிருந்து எழுதுவதில் ஆர்வமுடைய இவரது முதலாவது ஆக்கம் 1997 இல் எமது சஞ்சிகையில் வெளிவந்தது. தொடர்ந்து 30 இற்கும் மேற்பட்ட சிறுகதைகள், 50 இற்கும் மேற்பட்ட கவிதைகள், பல கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் ஐரோப்பியச் சஞ்சிகைகள், பத்திரிகைகள், வானொலிகளில் இடம்பிடித்திருக்கின்றன. வண்ண மலர்கள் (நல்வழிச் சிறுகதை), பிஞ்சு மனம் (சிறுவர்களுக்கான ஒழுக்கவியல் கருத்துக்களைக் கொண்ட 13 சிறுகதைகளின் தொகுப்பு) ஆகியன இவரது நூல்கள். இவரால் தயாரித்து வழங்கப்படும் ஆன்மீக நிகழ்ச்சிகள் பலராலும் பாராட்டப்பெற்றன.

வளங்கள்

{{வளம்1856|89-94}

வெளி இணைப்புக்கள்