ஆளுமை:எசேக்கியல், செபமாலை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:08, 7 செப்டம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=எசேக்கியேல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் எசேக்கியேல்
தந்தை செபமாலை
தாய் பாக்கியம்
பிறப்பு 1993.12.08
ஊர் கிளிநொச்சி
வகை கூத்துக்கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

எசேக்கியல், செபமாலை (1993.12.08 - ) கிளிநொச்சி, இரணைதீவைச் சேர்ந்த கூத்துக் கலைஞர். இவரது தந்தை செபமாலை; தாய் பாக்கியம். இவர் தரம் ஐந்து வரை இரணைதீவு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்றுள்ளார். தனது 21ஆவது வயதில் அமரர் மரியான் தலைமையில் மேடையேற்றப்பட்ட மனோகரா டிராமாவில் நடித்ததோடு ஆரம்பித்தது இவரின் கலைப்பயணம்.

வைத்தி அண்ணாவியின் மகனாகிய சின்னப்பூ அண்ணாவியின் செபஸ்தியார் நாடகத்தில் 1959ஆம் ஆண்டு செபஸ்தியார் பாத்திரமேற்று நடித்தார். 1969 ஆம் ஆண்டு மேடையேற்றப்பட்ட அந்தோனியார் நாடகத்தில் தோழிப் பெண் பாத்திரம் ஏற்று நடித்தார். 1970ஆம் ஆண்டு மேடையேற்றப்பட்ட கோலியாத் நாடகத்தில் தாவீது பாத்திரமேற்றார். 1981 ஆம் ஆண்டு மேடையேற்றப்பட்ட சந்தியோகுமையோர் நாடகத்தில் சேனாதிபதியாக பாத்திரமேற்றார். 1978ஆம் ஆண்டு மருசலீன் அண்ணாவி பழக்கிய ஞானசவுந்தரி நாடகத்திலும் நடித்தார். மருசலீன் அண்ணாவை பழகிய நொண்டி நாடகத்தில் நடித்தார். இத்தனை நாடகத்திலும் நடிப்பு மாத்திரமின்றி பிற்பாட்டிலும் இவர் பங்கு காத்திரமாய் இருந்ததாக மற்றைய கலைஞர்கள் கூறுகிறார்கள். இவர் ஒரு குணச்சித்திர நடிகர் நவரச நாயகன் திருவிழாக்களில் அரசு பாத்திரம் மந்திரி பாத்திரம் பாட்டு வேறுபட்ட குரல் நகைச்சுவை எல்லாம் செய்யக் கூடியவர்.