பகுப்பு:மகுடம்

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:41, 3 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'மகுடம்' இதழானது கிழக்கிலங்கை மட்டக்களப்பிலிருந்து வெளிவருகின்ற கலை இலக்கிய சமூக பண்பாட்டுக் காலாண்டு இதழாகும். 2012ஆம் ஆண்டு ஜனவரி-மார்ச் இதழாக வெளியீடு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக வெளிவருகின்றது. இதழின் ஆசிரியர் திரு வி.மைக்கல் கொலின்.

மகுடம் தனது உள்ளடக்கத்தில் இரு தளங்களை கொண்டுள்ளது. ஒன்று கலை, இலக்கியம், சமூகம், பண்பாடு தொடர்பான தொன்மங்களை சமகால பிரச்சனைகளோடு தொடர்புபடுத்தி ஆய்வுக்குட்படுத்துவது. மற்றயது புதிய தேடல்களுடன் கூடிய நவீன இலக்கியம் சார்ந்த ஆக்கபூர்வமான இலக்கிய படைப்புக்களையும், வடிவங்களையும் பரிணமிக்கச் செய்வது. இதனடிப்படையில் அமைந்த ஆய்வுகள், மொழி பெயர்ப்பு கவிதைகள், நேர்காணல்கள், கட்டுரைகள், நாடகம், குறுநாவல், கவிதைகள், சிறுகதைகள், என்பவற்றுடன் நூல் விமர்சனங்களையும் தாங்கி வெளிவருகின்றது.

தொடர்புகளுக்கு:- ஆசிரியர்,'மகுடம்', இல-90, பார் வீதி, மட்டக்களப்பு, இலங்கை. T.P:- 0094-77-4338878 E-mail:- w.michaelcollin@ymail.com Web:- www.magudammichael.blogspot.com

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:மகுடம்&oldid=157833" இருந்து மீள்விக்கப்பட்டது